புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் எஸ்ஐஆர் விழிப்புணர்வு ஓவியப்போட்டி
கோவை, டிச. 3: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி தொடர்பாக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பொதுமக்கள், கல்லூரி மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் அரசு மகளிர் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில், எஸ்ஐஆர் தொடர்பான விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. மேலும், சிலம்பாட்டம் மூலமாகவும், வில்லுப்பாட்டு மூலமாகவும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், கோவை மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மதுரா, மாநகராட்சி துணை ஆணையாளர் குமரேசன், பட்டதாரி மேற்பார்வையாளர் நிர்மலா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று எஸ்.ஐ.ஆர் படிவங்களை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும். அந்த படிவங்களை நிரப்பி வாக்குச்சாடி நிலை அலுவலரிடம் ஒப்படைப்பது குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, எஸ்ஐஆர் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர். மேலும், தெற்கு சட்டமன்றத் தொகுதி சார்ந்த பகுதிகளில் எஸ்ஐஆர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.