ரயில்வே பாலம் பராமரிப்பு பணிக்காக நல்லாம்பாளையம் சாலை மூடல்: பணிகளை விரைந்து முடிக்க திட்டம்
Advertisement
கோவை, டிச. 2: கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் பிரதான ரோட்டில் ரயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் கடந்து பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் கீழே குளம் போல தண்ணீர் தேங்கும். நல்லாம்பாளையத்தில் இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் அனைவரும் இந்த ரயில்வே பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.
இந்நிலையில், தற்போது சாய்பாபா கோயில் பகுதியில் மேம்பாலப் பணிகள் நடப்பதால், காந்திபுரம், பூமார்க்கெட் பகுதியில் இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கண்ணப்பநகர் வழியாக, கவுண்டம்பாளையத்திற்கு இந்த ரயில்வே பாலத்தின் கீழ் தான் செல்கிறது. இதனால், கடந்த சில மாதங்களாக ரயில்வே பாலம் ரோட்டில் அதிகளவில் கனரக வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
Advertisement