சுக்கிரவார்பேட்டை கோயிலில் 9 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு
Advertisement
கோவை, டிச. 2: தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையதுறை சார்பில் ஆன்மீக ஈடுபாடு கொண்ட 70 வயதிற்கு மேற்பட்ட 2 ஆயிரம் தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அறநிலையத்துறை கோயில்களில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபார்க் சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில், 9 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அவர்களுக்கு மாலை அணிவித்து, ஓம குண்டம் வளர்த்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் எவர்சில்வர் தட்டில் வேட்டி, பட்டுசேலை, பழங்கள், பிரசாதங்கள் வைத்து வழங்கப்பட்டது.
Advertisement