கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் கரூரில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு
கரூர், ஆக. 4: இந்திய நாடு சுதந்திரம் பெற போராட முதல் முதலில் அந்நியரை எதிர்த்து போராடியவர் மாவீரன் தீரன் சின்னமலை. இவரது நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு, அரசு விழாவாக ஆக.3ம் தேதி கொண்டாடி வருகிறது. இதன் அடிப்படையில், கரூர் கொங்கு நண்பர் சங்கம் சார்பில் சின்ன கொங்கு திருமண மண்டபத்தில் தீரன் சின்னமலை உருவ படத்திற்கு சங்கத் தலைவர் ஆடிட்டர் என். கே.எம்.நல்லசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர் செல்லத் துரை, பொருளாளர் பாலசுப்பிரமணியன் துணைத் தலைவர் மணிராம், துணைச் செயலாளர் முத்துசாமி மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் செல்வி, நிர்வாகிகள் இன்ஜினியர் விஜய் முருகேசன் மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அரசு விழாவில் கலந்து கொள்ள அனைவரும் சங்ககிரி புறப்பட்டு சென்றனர்.
Advertisement
Advertisement