பூசாரிக்கு கத்திக்குத்து
தூத்துக்குடி, ஜூன் 6: தூத்துக்குடி சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(42). இவர், கனகசபாபதி தெருவில் சந்தன மாரியம்மன் கோயில் வைத்து பூஜை செய்து வருகிறார். இவரிடம் இனிகோ நகரை சேர்ந்த அந்தோணி(44) என்பவர் வழக்கமாக குறி கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்தோணிக்கு மீன்பிடி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மணிகண்டன் தான் காரணம் என்று கருதி உள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் வந்த அந்தோணி, மணிகண்டனை கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தின் போது அந்தோணிக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.