கேளம்பாக்கம்-வண்டலூர் இடையே சாலையோர முட்செடிகள் அகற்றம்
இந்நிலையில், சாலையோரத்தில் உள்ள புதர்செடிகளும், முட்செடிகளும் வளர்ந்து காணப்பட்டன. இரவு நேரங்களில் சாலையோரமாக செல்லும் இரு சக்கர வாகன ஒட்டிகளை இந்த முட்செடிகளை பதம் பார்த்தன.இதன் காரணமாக சிறு விபத்துகள் நடைபெற்ற நிலையில் இவற்றை அகற்றி தடையற்ற போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வளர்ந்திருந்த முட்செடிகள், புதர்ச்செடிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.