கேப்பேட்டை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 83 தூய்மை பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு
குளித்தலை, அக்.30: குளித்தலை ஊராட்சி ஒன்றியம், கே. பேட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் விடுபட்ட மகளிர் உரிமைத்தொகை அதற்கான விண்ணப்பங்கள் பெறுதல் அடிப்படை வசதிகள் குடிநீர் இணைப்பு சொத்து வரி மாற்றம் கட்டிட அனுமதி பெறுதல் வியாபாரிகள் அடையாள அட்டை மற்றும் பல்வேறு சலுகைகள் பெறுவதற்கு பல்வேறு துறைகளில் 43 சேவைகளுடன் மனுக்கள் பெறப்பட்டது.
Advertisement
இந்தமுகாமில், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 கிராம ஊராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் 83 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு மாவட்ட தாட்கோ மேலாளர் முருகவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி சுந்தரபாண்டியன் ஆகியோரால் வழங்கப்பட்டது. முகாமில், அனைத்து துறை அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement