கணவர் குடும்பத்தாரால் ஆபத்து
கரூர், அக். 30: கரூரில் கணவரால் ஆபத்து இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கரூர் மாவட்டம், ஜெகதாபி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: ஜெகதாபி பகுதியில் வசித்து வருகிறேன்.
ஒரு ஆண் குழந்தை உள்ளது. எனது கணவர், கடந்த 14ம் தேதி அன்று கருர் ராயனூரில் உள்ள அவரின் தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், என்னிடம் தொடர்பு கொண்டு, ராயனூருக்கு வருமாறு அழைத்தார். நானும் சென்றேன். அப்போது, எனது கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் என்னை கடுமையாக தாக்கினர்.
இதனால், கருர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை காவல் நிலையத்திலும் மனு அளித்துள்ளேன். எனவே, அவர்களால் எனக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது. எனவே, அவரை அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.