குளித்தலையில் விசிக ஆர்ப்பாட்டம்
குளித்தலை, செப். 27: கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட வைகைநல்லூர் ஊராட்சி கோட்டமேடு திம்மம்பட்டி ஊராட்சி கணக்குப்பள்ளையூர், பொய்யாமணி ஊராட்சி டாக்டர் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதி மக்களின் அடிப்படைத் தேவையான சாலை வசதி, கழிப்பிட வசதி, மாயனம், மாயனசாலை, தெரு விளக்கு வசதி, குடிநீர் வசதி ஆகிய ஏழை எளிய மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பாக ஆர்ப்பாட்டம் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி அ.சக்திவேல்( எ) ஆற்றலரசு தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணை செயலாளர் க.பெரியசாமி, குளித்தலை தொகுதி செயலாளர் பொய்கை சுதாகர், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி, தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், குளித்தலை ஒன்றிய துணை செயலாளர்கள் மகாலிங்கம், குமார், முகாம் பொறுப்பாளர்கள் பாரதி, மனோஜ், சமூக ஊடக மையம் கவியரசன், தமிழ்செல்வன், தனம் கவிதா, கார்த்திக், நவீத் மணி,கனவை நாகமாணிக்கம் கண்ணன், முகாம் செயலாளர் அஜய், பிரவீன், சங்கர், ஜூலி கோமதி, பானு செல்வராணி, ராணி மற்றும் கரூர் கிழக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.