தாந்தோணிமலை அருகே 100 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல்
கரூர், செப். 27: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை சுங்ககேட் அருகே குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயல்வதாக தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் வந்தது.
Advertisement
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சோதனை மேற்கொண்ட போது, அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் இருந்து 100 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement