அரவக்குறிச்சி அரசு கல்லூரி மாணவன் மாநில அளவிலான சாகச பயிற்சியில் சாதனை
கரூர், ஆக. 26: மாநில அளவிலான நடைபெற்ற சாகச பயிற்சியில் அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவன் தேர்வு செய்யப்படார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற மாநில அளவிலான சாகச பயிற்சியில் அரவக்குறிச்சி உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம், 2ம் ஆண்டு படித்து வரும் அஜய்குமார் என்ற மாணவர் சாகச பயிற்சியில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
Advertisement
சாகசப்பயிற்சியில் மாநில அளவில் இடம்பிடித்த மாணவர் அஜய் குமாரை கல்லூரி முதல்வர் முனைவர் காளீஸ்வரி. மற்றும் மூத்த பேராசிரியர் செந்தில்குமார். வெகுவாக பாராட்டினர்.மேலும் கல்லூரி பேராசிரியர்கள், சக மாணவ. மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Advertisement