தோகைமலை அருகே மாயமான இளம்பெண் மீட்பு
தோகைமலை, நவ, 25: தோகைமலை அருகே மாயமான இளம் பெண்ணை போலீசார் மீட்டனர். தோகைமலை அருகே நாகனூர் கலிங்கப்பட்டியில் மாயமான பெண்ணை போலீசார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி நாகனூர் தவமணி என்பவரின் மனைவி சினேகா (23). இவருக்கும் தவமணிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லை. மேலும் சினேகா 10 வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் அருகில் உள்ள கலிங்கப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சினேகா சென்று உள்ளார்.
பின்னர் அங்கு இருந்த சினேகா திடீர் என்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சினோகவின் பெற்றோர்கள் தங்களது உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மாயமான சினேகா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சினோகவின் தாயார் கனகா தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார் மாயமான சினோகவை தேடிவருகின்றனர்.