தோகைமலை அருகே மதுபானங்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது
தோகைமலை, அக். 24: மதுபானம் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை காவல்சரகம் கொசூர் ஊராட்சியைச் சேர்ந்த மாணிக்கம்மாள் (50). இவர். கொசூர் கொத்தமல்லிமேடு அருகில் உள்ள தனது வீட்டின் அருகே மதுபானங்களை விற்பனை செய்துள்ளார்.
Advertisement
இதேபோல் கழுகூர் ஊராட்சி அக்காண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(எ)சின்னத்தம்பி (49). இவர், கூடலூர் ஊராட்சி பேரூர் உடையாபட்டியில் தனது பெட்டிக்கடையில் மதுபானங்களை விற்பனை செய்துள்ளார். தகவலறிந்த தோகைமலை போலீசார் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது மாணிக்கம்மாள் மற்றும் துரைசாமி (எ) சின்னத்தம்பி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
Advertisement