நெல் அரவை மில் இரும்பு கேட்டை திருடிய நபர் கைது
குளித்தலை, நவ.22: குளித்தலை அருகே நெல் அரவை மிலில் இரும்பு கேட்டை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 50. இவருக்கு சொந்தமாக கருங்களாப்பள்ளியில் நெல் அரவை மில் உள்ளது.
Advertisement
இந்த மில்லின் முகப்பில் இருந்த இரும்பு கேட்டை கருங்களாபள்ளியைச் சேர்ந்த பாலகுமார் (30) என்பவர் திருடி சென்று விட்டதாக செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து பாலகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement