குளித்தலையில் வீட்டுமனை விற்பதாக ரூ.29 லட்சம் மோசடி
குளித்தலை, நவ.22: குளித்தலையில் வீட்டுமனை விற்பதாக ரூ.29 லட்சம் மோசடி வழக்கு பதிந்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் மேற்கு மடவாள தெருவை சேர்ந்தவர் அமுதா (58). இவர் தண்ணீர் பள்ளி பகுதியில் உள்ள டாக்டர் கலைஞர் நகர் என்ற பெயரில் வீட்டுமனைகள் இருப்பதாக விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டு விளம்பரத்தில் உள்ள கைபேசி அழைத்துள்ளார்.
அப்போது திருச்சி மாவட்டம் சீனிவாசநல்லூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தொடர்பு கொண்டு இடத்திற்கு சொந்தமானவர் என்றும் வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்து தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.29 லட்சம் பெற்றுக் கொண்டு அமுதாவை நம்பிக்கை மோசடி செய்துள்ளார்.
இது குறித்து கேட்ட அவரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அமுதா குளித்தலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ரவீந்திரன் அவரது மனைவி நிஷாந்தி ஆகிய இரண்டு பேர் மீது போலிசார் வழக்கு பதிந்து ரவீந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்