ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கரூர், நவ. 22: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். சிஐடியூ மாவட்ட தலைவர் ராஜாமுகமது, துணைத்தலைவர் முருகேசன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர்.
திருவாரூர் மாவட்ட சிஐடியூ தலைவர் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகளை கைது செய்த திருவாரூர் மாவட்ட காவல்துறையை கண்டித்து இந்த அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் தனியார், கூட்டுறவுச் சங்கங்களில் யூரியா 1065 மெட்ரிக் டன்னும், டிஏபி 550மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 494மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 1643மெட்ரிக் டன்னும் என மொத்தம் 3752மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.