வெள்ளியணை அருகே பெருமாள் கோயிலில் மின் கசிவால் தீ விபத்து
கரூர், நவ. 21: வெள்ளியணை பெருமாள் கோயிலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே பெருமாள் கோயிலில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே பழமை வாய்ந்த பிரசன்னா கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது.
இந்த கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கோயில் அர்ச்சகர் பூஜை செய்வதற்காக கோயிலின் உள்ளே சென்ற போது, மின்கசிவு காரணமாக மின்பெட்டியில் இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர், தீயணைப்புத்துறையினர்களுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துககு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்து குறித்தும், சேதமடைந்த பொருட்கள் குறித்தும் வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.