பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் ஓய்வூதியர்கள் சங்கம் தீர்மானம்
கரூர், ஆக. 20: பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி ஓய்வூதியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. கரூர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்ககூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் து.சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வி.மோகன்குமார், முன்னாள் மாநில துணைத்தலைவர், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
Advertisement
முன்னதாக மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்றார். கூட்டத்தில் 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஒய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ரூ. 7850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement