க.பரமத்தி அருகே மானாவாரி சாகுபடி பயிர்களுக்கு ஏற்ற மழை
க.பரமத்தி, செப்.19: க.பரமத்தி அருகே நெடுங்கூர் சுற்று பகுதியில் நேற்று மிதமான மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் நெடுங்கூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த நாட்களாக அளவிற்கு அதிகமாக 100செல்சியஸ் டிகிரி போல் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி எடுத்தது. இந்நிலையில் மாலையில் திடீரென குளிர்ந்த காற்று வீசியதோடு மழை பெய்யத் தொடங்கியது.
அதையடுத்து சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் க.பரமத்தி மற்றும் நெடுங்கூர் சுற்று பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியதால் சைக்கிள் மற்றும் டூவீலரில் சென்ற பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது பெய்த மழையால் மானாவாரியில் சாகுபடி செய்த எள் சோளம், கம்பு உள்ளிட்ட தீவன பயிர்கள் செழித்து வளர பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.