மாநகராட்சி மார்க்கெட்டை அருகே வாழைக்காய் மண்டி சாலையில் கால்வாய்போல் மெகா பள்ளம்
கரூர், செப்.19: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாழைக்காய் மண்டி செல்லும் சாலையின் குறுக்கே கால்வாய் போல் ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரைந்து சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியை ஒட்டி வாழைக்காய் மண்டி செயல்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் மண்டி செயல்பட்டு வருகிறது.இந்த பகுதி வழியாக அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
Advertisement
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சாலையில் பிளவு ஏற்பட்டு மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதன் காரணமாக மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement