கரூர் மாவட்டத்தில் சாரல் மழையுடன் அதிக பனிப்பெழிவு
கரூர், நவ.18: கரூர் மாவட்டத்தில் சாரல் மழையுடன் பனி பெழிவு அதிகளவு பெய்ய எதிர்பார்ப்பு. கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மிமீ. இநத மழையை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டுமே கரூர் மாவட்டம் அதிகளவு பெற்று வருகிறது.இந்நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் கரூர் மாவட்டம் குறிப்பிடத்தக்க அளவு மழையை பெறவில்லை. இருப்பினும், வடகிழக்கு பருவமழை காலத்திலாவது மாவட்டம் அதிகளவு மழையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர். கடந்த நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டம் முழுதும் இதமான சூழல் நிலவியதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைந்துள்ளனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்தது.
அதற்கு பிறகு மழை பெய்யாத நிலையில், நேற்று காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வானம் மேகமுட்டத்துடன் காணப்பட்டதோடு, லேசான அளவில் சாரல் மழையும் பெய்தது. இதன் காரணமாக சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் சந்தோஷமடைந்துள்ளனர். இருப்பினும், வடகிழக்கு பருவமழை டிசம்பருடன் முடிவடைய உள்ளதால் அதற்குள் கருர் மாவட்டம் அதிகளவு மழையை பெற வேண்டும் எனற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.