தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளுவர் மைதானத்தில் ‘கார் பார்க்கிங்’
கரூர், அக். 18: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளுவர் மைதானத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அக்டோபர் 17ம்தேதி முதல் 19ம்தேதி வரை கரூர் ஜவஹர் பஜார், ஈஸ்வரன் கோயில் சந்து, லாரி மேடு போன்ற பல்வேறு பகுதிகளில் தரைக்கடை வியாபாரிகள் கடைவைத்து வியாபாரம் செய்வார்கள்.
Advertisement
இதே போல், ஜவஹர் பஜாரில் அனைத்து விதமான ஜவுளி கடைகள், நகைக் கடைகள் அனைத்தும் உள்ளன. இதன் காரணமாக இந்த ஜவஹர் பஜாரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஜவஹர் பஜாரை ஒட்டியுள்ள திருவள்ளுவர் மைதானத்தில் கார் போன்ற வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் மைதானத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது.
Advertisement