கரூரில் இன்று போக்குவரத்து மாற்றம்
கரூர், செப். 17: கரூரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி நிலை) பதவிகளுக்கான கணினி வழித்தேர்வுகள் ((CBT) ) நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று (17.09.2025) நடைபெறும் விழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னிட்டு, பேருந்து வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளதால், மேற்படி, கணினி வழித்தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையமான ஸ்ரீ மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதும் தேர்வர்கள் மட்டும், தேர்வு நாளன்று (17.09.2025) பிற்பகல் (2.30 முதல் 5.30 வரை) தேர்விற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே அதாவது மதியம் 12.00 மணிக்குள், தேர்வு மையத்திற்கு வரவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.