செல்லாண்டிபாளையத்தில் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை
Advertisement
கரூர், செப்.15: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகள் மிதக்கிறது.இதன் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வாய்க்கால் பகுதியில் பரவியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு சுத்தமாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Advertisement