குட்கா விற்றவர்மீது வழக்குப்பதிவு
கரூர், ஆக. 15: கரூர் மாவட்டம் நங்கவரம் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார்கைது செய்தனர். கரூர் மாவட்டம் நங்கவரம் அடுத்த நெய்தலூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பதாக நங்கவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சோதனையில் 100 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நாகரெத்தினம் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement
Advertisement