கரூர் மாநகராட்சியில் சாக்கடை வடிகால் அமைக்க வேண்டும்
கரூர், அக். 14: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியில் பல்வேறு தெருக்களில் சாக்கடை வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. எனவே, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தை மையப்படுத்தி தெற்கு மற்றும் வடக்கு பகுதிகள் உள்ளன. இந்த இரண்டு பகுதிகளிலும் நு£ற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
இதில், தெற்கு காந்திகிராமம் பகுதி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. தாந்தோணிமலை, முத்துலாடம்பட்டி, கணபதிபாளையம் ஆகிய பகுதிகளுடன் இணைந்த பகுதியாக தெற்கு காந்திகிராமம் உள்ளது.இந்த பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளில் இதுநாள் வரை சாக்கடை வடிகால் வசதி அமைக்காமல் உள்ளது. இதனால், பல்வேறு சிரமங்களை இந்த பகுதியினர் அனுபவித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சாக்கடை வடிகால் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.