பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர், அக். 14: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்டல தலைவர் முத்து மாணிக்கம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் நிகழ்ச்சி குறித்து பேசினார்., மாநில செயலாளர் கலா, நிர்வாகிகள் ராதிகா, சிவசங்கரி, செல்வராஜ், பெரியசாமி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பாரத பொது தொழிலாளர் நலச் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எந்தவித பாகுபாடின்றி தீபாவளி போனஸ் ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் செயல்படும் 18 வாரியத்தில் பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் பாகுபாடின்றி ஒரே மாதிரியான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.