மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தினவிழா
கரூர், ஆக. 13: கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா நடைபெற்றது. மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நூலகர் தின விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் சங்கர் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். அரசு கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன் முன்னிலை வகித்தார்.
நூலகர்களை பாரா ட்டி, மதுரையை சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் சோழ நாகராஜன் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்வில், வழக்கறிஞர் ராஜசேகர் சிவகாமி, கரூர் டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகி வடிவேல் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். மாவட்ட மைய நூலக நூலகர் ரோஸ்மேரி சாந்தி நன்றி கூறினார்.