பண்டுதகாரன்புதூர் மகளிர் கலை கல்லூரியில் நாளை கல்விக்கடன் முகாம்
கரூர், செப். 11: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் (தனியார்) கல்லூரி வளாகத்தில் நாளை (12ம் தேதி) சிறப்பு கல்விகடன் முகாம் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. வித்யாலஷ்மி போர்டலில் கல்விகடன் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் முகாம் அலுவலர்கள் மூலம் உடன் நிவர்த்தி செய்யப்படும்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பான்கார்டு, ஆதார் அட்டை (ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி), மின்னஞ்சல் முகவரி (கடவுச்சொல்), வங்கி கணக்கு புத்தகம் (மாணவர் மற்றும் பெற்றோர்/ பாதுகாவலர்), வருமானச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கல்வி கட்டண பட்டியல், புகைப்படம் (மாணவர் மற்றும் பெற்றோர்/பாதுகாவலர்), கல்லூரியில் சேர்ந்ததற்கான ஆதாரம் முதலான ஆவணங்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.