அய்யர்மலை அரசுப் பள்ளியில் 56 மாணவ, மாணவிகளுக்கு கல்விசீர் வழங்கும் நிகழ்ச்சி
குளித்தலை, செப்.11: அய்யர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் உள்பட 56 பேருக்கு கல்விசீர் வழங்கப்பட்டது. கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களை இழந்த மாணவ, மாணவியருக்கு கல்விசீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்து, பெற்றோர்களை இழந்த 56 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், தேர்வுக்கு தேவையான எழுதுபொருட்கள் போன்றவற்றை வழங்கினார்.
சமூக ஆர்வலர் குமார், கல்வியாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி மேலாண்மைகுழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இருபால் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் புருஷோத்தமன் தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.