கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் செப். 10: கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பிச்சைமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
Advertisement
சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் ஜீவானந்தம்இ மாவட்ட தலைவர் ராஜாமுகமதுஇ மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன்இ துணைத்தலைவர் முருகேசன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். மாற்று ஏற்பாடின்றி அவசர கதியில் அமல்படுத்தும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிடக்கோரி இந்த அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement