குளித்தலையில் இறந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் சேமநலநிதி வழங்கல்
குளித்தலை, செப். 9: குளித்தலையில் மறைந்த வக்கீல் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் சேமநலநிதி வழங்கப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றிவந்த மூத்த வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி மற்றும் வக்கீல் குமரவேல் இயற்கையை எய்தினர்.
Advertisement
அவர்கள் குடும்பத்தினருக்கு வக்கீல் சேமநல நிதியிலிருந்து தலா ரூ 10 லட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ் ச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. வக்கீல் சங்க தலைவர் சாகுல் அமீது இறந்த வழக்கறிஞர் குடும்பத்தாருக்கு சேமநலநிதிக்கான காசோலை வழங்கினார். அருகில் வக்கீல் சங்க செயலாளர் சரவணன், அரசு வக்கீல் நீலமேகம் நோட்டரி பப்ளிக் சக்திவேல், நல்லதம்பி, தரகம்பட்டி சக்திவேல் உடன் இருந்தனர்.
Advertisement