பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி குளித்தலை அரசு கல்லூரி முன் வாயிற் முழக்க போராட்டம்
குளித்தலை, ஆக.7: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் குளித்தலை கிளை சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நேற்று கருப்பு பட்டை அணிந்து வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் குளித்தலை கிளை தலைவர் முனைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
கோரிக்கை குறித்து கிளைச் செயலர் முனைவர் அன்பரசு விளக்க உரை நிகழ்த்தினார். இதனையடுத்து நடந்த வாயில் முழக்கப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக குளித்தலை கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் முனைவர் உமாதேவி நன்றி கூறினார்.