வேளாண் அறிவியல் மையத்தில் சம்மான் நிதி வழங்கும் காணொலி நிகழ்ச்சி
தோகைமலை, ஆக. 7: தோகைமலை அருகே புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக பிரதம மந்திரியின் சம்மான் நிதி 20வது தவணை வழங்கும் காணொலி நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்டம் புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக பிரதம மந்தரியின் சம்மான் நிதி வழங்கும் காணொலி நிகழ்ச்சி நடந்தது.
ஆர்ச்சம்பட்டி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர் மற்றும் நெய்தலூர் கிராமங்களில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர், உழவர் கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 20வது தவணையாக ரூ.20,500 கோடியை சுமார் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமர் விடுவித்தது குறித்து நேரடியாக ஒளிப்பரப்பட்டது. வேளாண் அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுநர்கள் வேளாண் விரிவாக்கம் தமிழ்செல்வி, தோட்டக்கலை கவியரசு, மண்ணியியல் மாரிகண்ணு, கால்நடை அறிவியல் சரவணன், மனையியல் மாலதி,
ஆய்வக உதவியாளர் தமிழ்செல்வன் கலந்து கொண்டனர். இதில் வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள், அரசு திட்டங்கள், பூக்கள் மற்றும் காய்கறி பயிர்களில் பூச்சி நோய் மேலாண்மை, மண்வள மேலாண்மை, அங்கக முறையில் வீட்டு தோட்டம் அமைத்தல் மற்றும் வேளாண் விளைப் பொருட்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்து விளக்கமளித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 210 விவசாயிகள் உள்பட கிராமப்புற பெண்கள் கலந்து கொண்டனர்.