கலைஞர் நினைவு நாள் அஞ்சலி தொடர்பாக கரூரில் இன்று திமுக செயற்குழு கூட்டம்
கரூர் ஆகஸ்ட் 5: கரூர் மாவட்ட கழகச் செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கடந்த 7-8-2018ம் தேதி காலமானார். அன்னாரின் புகழ் தமிழ் இருக்கும் வரை ஓயாது உறங்காது. இது தொடர்பாக கரூர் மாவட்ட திமுக சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கரூர் கலைஞர் அறிவாலயத்தில்காலை 10 மணிக்கு கலைஞர் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு தொடர்பான செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக, அனைத்து அணி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ளுமாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.