நடிகர் விஜய்யை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
கரூர், அக். 4: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதை தொடர்ந்து நடிகர் விஜயை கைது செய்யக்கோரி சாமானிய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக வெற்றி கழகம் தமிழக வெற்றி கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பரப்புரையில் நடிகர் விஜய் பேசினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்த பிரச்சனைக்கு காரணமான த.வெ. க .தலைவர் நடிகர் விஜய் மீது இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.
இந்நிலையில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பாக, கரூர் மாவட்ட சாமானிய மக்கள் கட்சி சார்பில், கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழப்பிற்கு காரணமான தவெக கட்சியின் தலைவர் விஜய்யின் மீது, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, கைதுசெய்ய வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.