கையிலை எதிர்ப்பு பேரணி: நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
வேலாயுதம்பாளையம், அக். 26: புகழூர் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தினை நகராட்சி தலைவர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.கரூர் மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரியம், புகழூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் இணைந்து நேற்று சனிக்கிழமை நெகிழி கழிவு சேகரிப்பு இயக்கம் மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் புகையிலை இல்லாத இளைய சமுதாயம் 3.0 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி புகழுர் நகராட்சி ரவுண்டானா, கடைவீதி, மலை வீதி வணிக பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.
இப்பேரணியில் கலந்து கொண்ட சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, புகையிலைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, போதைப் பொருளுக்கு அடிமையாகக்கூடாது, புகையிலை இல்லாத இளைய சமுதாயத்தை உருவாக்குவோம், புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பேரணியில் சென்ற மாணவர்கள் பொது மக்களுக்கு கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.பேரணியில் பள்ளி தலைமையாசிரியர் விஜயன், மூத்த ஆசிரியர் பாலசுப்பிரமணியம், பொதுசுகாதாரத்துறை ஆய்வாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் நகராட்சி நிர்வாக அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வள்ளிராஜ் பேரணியில் நன்றி கூறினார்.