பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை
அரவக்குறிச்சி, செப். 24: தினகரன் நாளிதழில் எதிரொலியாக புத்தாம்பூர் ஜவுளி பூங்கா பஸ் நிறுத்தத்தில் புதியதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புத்தாம்பூர் அருகே ஜவுளி பூங்கா உள்ளது. இங்கு ஆயிரக்கணக் கானோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கரூருக்கு தினமும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், வேலை நிமித்தமாக செல்லும் பொதுமக்களும் ஜவுளி பூங்கா அருகில் உள்ள பஸ் நிறுத்தம் வந்து பஸ்சில் சென்று வருகின்றனர்.சுற்றுப்புற கிராமங்களுக்கு இந்த பகுதி முக்கியமான ஜவுளி பூங்கா பேருந்து நிறுத்தம் சந்திப்பாக உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மணிக்கணக்கில் கால்கடுக்க நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் வெயில், மழை போன்ற இயற்கை சீற்றங்களும் பொதுமக்களை தாக்கி வருகிறது.சாலையின் ஓரங்களில் நின்றுள்ள பொதுமக்கள் மீது அந்த வழியாக வருகின்ற வாகனங்கள் நிலைதடுமாறி மோதுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.