தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; கரூர் மாவட்டத்தில் இதுவரை 505.30 மி.மீ. மழை பொழிவு

கரூர், அக். 23: வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கரூர் மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை தொடர்ந்து மழை பெய்ததால் கரூரின் சீதோஷ்ணநிலையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மி.மீ. பனிக்காலமான ஜனவரி, பிப்ரவரியில் 16.8 மி.மீட்டரும், கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் 109.5 மி.மீட்டரும், தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 238.4 மி.மீட்டரும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் 287.5 மி.மீட்டரும் என ஆண்டு முழுவதும் இந்த சீசனில் 652.20 மி.மீட்டர் மழையை மாவட்டம் பெற்றுவருகிறது. இதுதான் கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவாக உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு 723.6 மிமீட்டரும், 2012ம் ஆண்டு 527.9 மி.மீட்டரும், 2013ம் ஆண்டு 489.1 மி.மீட்டரும், 2014ம் ஆண்டு 567.52 மி.மீட்டரும், 2015ம் ஆண்டு 820.52 மி.மீட்டரும், 2016ம் ஆண்டு 350.52 மி.மீட்டரும், 2017ம் ஆண்டு 740.58 மி.மீட்டரும், 2018ம் ஆண்டு 486.67 மி.மீட்டரும், 2019ம் ஆண்டு 597.91 மி.மீட்டரும், 2020ம் ஆண்டு 751.03 மி.மீட்டரும், 2021ம் ஆண்டு 934.56 மி.மீட்டரும், 2022ம் ஆண்டு 748.37 மி.மீட்டரும், 2023ம் ஆண்டு 557.53 மி.மீட்டரும், 2024ம் ஆண்டு 782.60 மி.மீ என்ற அடிப்படையில் மழை பெய்திருந்தது.

இதனடிப்படையில், கடந்த 2011ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 14 ஆண்டுகளில் கரூர் மாவட்டம் 7 முறை மட்டுமே கரூர் மாவட்டம் ஆண்டு சராசரி மழையை பெற்றுள்ளது. 7 முறை சராசரியை விட மிகவும் குறைவான அளவில்தான் கரூர் மாவட்டம் பெற்றுள்ளது.

ஆண்டு சராசரி மழையை கரூர் மாவட்டம் பெறாத ஆண்டுகளில் கரூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு, விவசாய பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை மாவட்டம் சந்தித்துள்ளது.

அந்த வகையில், கடந்த 2023ம் ஆண்டும் கரூர் மாவட்டம் மிகவும் குறைவான மழையைத்தான் மாவட்டம் பெற்றது. மாறாக 2024ம் ஆண்டு கரூர் மாவட்டம் அதிகளவு மழையை பெற்றது. அதனடிப்படையில், வடகிழக்கு பருவமழை துவங்கி 20 நாட்கள் கடந்து தற்போதுதான் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாகவே நல்ல மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளது.

அதன்படி, கரூர் 23.40 மி.மீ, அரவக்குறிச்சி 96 மிமீ, அணைப்பாளையம் 66.40 மிமீ, க.பரமத்தி 17 மிமீ, குளித்தலை 39 மிமீ, தோகைமலை 39.40 மி.மீ, கிருஷ்ணராயபுரம் 61.50 மிமீ, மாயனூர் 52 மிமீ, பஞ்சப்பட்டி 41.60 மி.மீ, கடவூர் 27 மி.மீ, பாலவிடுதி 30 மிமீ, மயிலம்பட்டி 17 மி.மீ என மாவட்டம் முழுவதும் 505.30 மி.மீ மழை பெய்திருந்தது. இதன் மொத்த சராசரி 41.11 ஆக உள்ளது.

தொடர்ந்து இனி வரும் மாதங்களில் கரூர் மாவட்டம் கூடுதல் மழையை பெறும் பட்சத்தில் ஆண்டு சராசரியை விட அதிகளவு மழையை மாவட்டம் பெறும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

சராசரியை தாண்டும் என எதிர்பார்ப்பு

ஆண்டு சராசரி மழையை கரூர் மாவட்டம் பெறாத ஆண்டுகளில் கரூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு, விவசாய பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை மாவட்டம் சந்தித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டும் கரூர் மாவட்டம் மிகவும் குறைவான மழையைத்தான் மாவட்டம் பெற்றது. மாறாக 2024ம் ஆண்டு கரூர் மாவட்டம் அதிகளவு மழையை பெற்றது.

Advertisement

Related News