பராமரிப்பு இல்லாத மழை நீர் வடிகால் தீபாவளி பண்டிகைக்காக நான்கு நாட்களாக ஓட்டல்கள் மூடல்
க.பரமத்தி, அக்.23: தீபாவளி பண்டிகைக்கு சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெளியூர்வாசிகள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். க.பரமத்தி ஒன்றிய சுற்று வட்டார பகுதியில் பெரிய மற்றும் சிறிய அளவிலான டீக்கடை, பேக்கரி, டிபன் கடைகள், ஓட்டல், மெஸ் மற்றும் பெரிய அளவிலான ஓட்டல்கள் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. வெளி மாநிலம் மற்றும் மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இங்கு பல்வேறு வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இங்குள்ள உணவு விடுதிகளில் கணக்கு வைத்து உணவருந்தி வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சிறிய மற்றும் பெரிய ஓட்டல் கடைகள் அனைத்தும், கடந்த 3 நாட்களாகவே மூடப்பட்டுள்ளன.
இதனால் வெளியூரில் இருந்து கிரஷர் வாகன ஓட்டுனர்கள், லோடுமேன்கள் போன்ற வேலைகளுக்காக இங்கு தங்கியுள்ளவர்கள், பொங்கலுக்கு ஊருக்கு செல்லாதவர்கள் உள்ளிட்டோர் உணவுக்காக கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திறந்திருந்த ஒரு சில கடைகளிலும், உணவுப்பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தது. போதிய அளவு உணவு கிடைக்காமல் அவர்கள் அல்லாடுகின்றனர். இதனால் உணவுக்காக கடைகளை தேடி நகரத்திற்கு சென்று திரும்புவதால் கூடுதல் செலவாகிறது என பாதிக்கப்பட்ட பலரும் தெரிவித்தனர்.