குளித்தலை அருகே மது விற்றவர் கைது
Advertisement
குளித்தலை, செப்.21: குளித்தலை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (68). இவர் தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் குளித்தலை சப்இன்ஸ்பெக்டர் சரவணகிரி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மருதூர் அக்ரஹாரம் பகுதியில் மணி என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்ததால் மணி மீது போலீசார் வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தார். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Advertisement