கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் கலை திருவிழா
Advertisement
கிருஷ்ணராயபுரம், ஆக. 19: கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் கலை திருவிழா நடைபெற்றது.கரூர் மாவட்டம், கிரு ஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2025-26ம் ஆண்டுக்கான பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி உதவி தலைமை ஆசிரியை தமிழ் பொன்னி தலைமை வகித்தார். கலைத் திருவிழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் பரதநாட் டியம், நாட்டுப்புற பாடல் நடனம், கிராமிய நடனங்கள் தனி மற்றும் குழுவாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆசிரியைகள் சாந்தகுமாரி சுகன்யா, சாம்சு நிஷா, லதா ஆகியோர் நடுவராக பங்கேற்றனர். நிகழ்ச்சிகள் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் நடனமாடினார்.
Advertisement