கடவூர் ஊராட்சி சார்பில் நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு
கடவூர், நவ, 15: கடவூர் ஊராட்சி சார்பில் நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு வருவதால் கடவூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கரூர் மாவட்டம் கடவூர் வட்டார பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள சாலையில் கடவூர் ஊராட்சி மன்ற நிர்வாகம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வந்ததால் சாலைகளின் இருபுறங்களிலும் முற்செடிகள் மற்றும் புற்கள் முளைத்து காணப்பட்டு வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இடையூரை ஏற்படுத்தியும் வருகிறது.
இதில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள பெரும்பாலான சாலைகளில் இருபுறங்களிலும் முற்செடிகளையும் புற்களையும் அகற்றி வருகின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான சாலைகளின் இரு புறங்களிலும் அதிகமான முற்செடிகளும் புற்களும் படர்ந்து காட்சி அளித்து வருகிறது.
இதனால் கிராமச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் பெரும் சிறமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடவூர் வட்டாரத்தில் மிக முக்கியமான கிராம ஊராட்சியாக கடவூர் ஊராட்சி கிராமம் திகழ்ந்து வருகிறது. இங்கு மிகப்பலமை வாய்ந்த பிரமாண்டமான மன்னர் காலத்தின் ஜமீன் அரண்மணை, தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ள தேவாங்கு சரணாலயம், சுற்றுலாத்துறையின் கீழ் உள்ள பொண்ணணியாறு அணை, நான்கு திசைகளையும் சூழ்ந்து உள்ள இயற்கை எழில் மிகு மலைகள் அமைந்து உள்ளதால், கரூர் மாவட்டத்தின் பொக்கிசமாக கடவூர் ஊராட்சி திகழ்ந்து உள்ளது.இதனால் தினந்தோறும் கடவூர் ஊராட்சி கிராமங்களுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு வருகின்ற மத்திய மாநில அதிகாரிகளும் கடவூர் ஊராட்சி கிராமங்களை ஆய்வு செய்தும், பார்விட்டும் செல்கின்றனர். இதனால் மத்திய மாநில அரசுகளின் திட்டப்பணிகளும் அதிகமாக நடைபெற்றும் வருகிறது. இதனால் கடவூர் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கடவூர் கிராமத்திற்கு வருகின்ற முக்கிய சாலையான நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள பாலவிடுதி-கடவூர் சாலையின் இருபுறங்களிலும் முற்செடிகளையும் புற்களையும் அகற்றி உள்ளனர்.
பின்னர் சாலையின் இருபுறங்களிலும் கடவூர் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பாக இயல்வாகை, மந்தாரை, கருவாறை, கொடுக்காப்புளி, புங்கை உள்பட 578 மரக்கன்குளை நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக மரக்கன்றுகளை சுற்றி முல்வேலி அமைத்து உள்ளனர். மேலும் நடப்பட்டு உள்ள மரக்கன்றுகளுக்கு 100 நாள் பணியாளர்களை கொண்டு தினந்தோறும் தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.
இந்த பணிகளை கடவூர் ஒன்றிய ஆனையர்கள் மங்கையர்கரசி, சுரேஷ்குமார் மேற்பார்வையில் கடவூர் ஊராட்சி மன்ற செயலாளர் சசிக்குமார் தலைமையில் 100 நாள் பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து செய்து வருகின்றனர். இதனால் இயற்கை எழில்மிகு கடவூர் செல்லும் முக்கிய சாலையின் இருபுறங்களிலும் முற்களை அகற்றி மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்ற கடவூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.