தென்னை மரங்களில் போரான் சத்து குறைபாடு
கரூர், செப். 3: தென்னை மரங்களில் போரான் சத்தின் குறைபாடு மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: போரான் சத்தின் அறிகுறிகளை பொறுத்தவரை, தென்னையில் ஒலைகளில் சிற்றிலைகளின் நுணிகள் வளைந்து இருக்கும். குரும்பை உதிர்வும் ஏற்படும். காய்கள் வெடிக்கும். பருப்பு உற்பத்தி குறைந்து காணப்படும். இதனை கட்டுப்படுத்த, மண் ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் தேவையான போராக்ஸ் உரத்தினை இடவேண்டும். 4 ஆண்டு மரம் மற்றும் அதற்கு மேலாக உள்ள மரங்களுக்கு, ஒரு மரத்திற்கு 200 கிராம் போராக்ஸ், ஆண்டுக்கு ஒருமுறை இடவேண்டும்.
அல்லது தமிழ்நாடு நுண்ணுட்டச்சத்து கலவை 1 கிலோ, மரம், வருடம், எருவுடன் சேர்த்திடவேண்டும். சுபாபுல், எருக்கு போன்ற செடிகளை தென்னை மரத்தின் வேர்ப்பகுதியில் மடக்கி விடலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.