உள்வீரராக்கியம் ஏரிக்கான வாய்க்காலை தூர்வாராததால் தேங்கி நிற்கும் மழைநீர்
கரூர், டிச.2: உள்வீரராக்கியம் ஏரிக்கான வடிகால் வாய்க்காலை தூர்வாரததால் மழை நீர் தேங்கி நிற்பதையடுத்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கருர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியின் வழியாக லிங்கத்தூர் பகுதியை ஒட்டி உள்வீரராக்கியம் ஏரிக்கான வரத்து வாய்க்கால் செல்கிறது. வெள்ளியணை பகுதியில் ஆரம்பித்து, உள் வீரராக்கியம் வரை இந்த வரத்து வாய்க்கால் பரந்து விரிந்து செல்கிறது.
இந்நிலையில், வரத்து வாய்க்காலின் போக்கை தடுத்து நிறுத்தும் வகையில் அதிகளவு செடி கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. விரைவில் தென்மேற்கு பருவமழை துவங்கவுள்ளது.அந்த சமயத்தில் அதிகளவு தண்ணீர் இந்த வரத்து வாய்க்கால் வழியாக செல்லும் என்பதால், முன்கூட்டியே இந்த வாய்க்காலை தூர்வாரி செடி கொடிகளை அகற்றி, எளிதாக தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.