திருவட்டார் அருகே வீட்டில் பதுக்கிய 100 கிலோ குட்கா பறிமுதல் வாலிபர் கைது
திருவட்டார், அக்.30: திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் வீயன்னூர் பகுதியில் உள்ள அஜித்குமார்(35) என்பவரது வீட்டில் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. வீட்டில் முழுமையாக பரிசோதனை செய்த போலீசார் சிறுபொட்டலங்களாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். சுமார் 100 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர்.
Advertisement
Advertisement