மலப்புரம் அருகே பாஜ பெண் பிரமுகரை பலாத்காரம் செய்ய முயற்சி யூ டியூபர் கைது
திருவனந்தபுரம், ஆக.30: கேரள மாநிலம் மலப்புரம் அருகே வீடு புகுந்து பாஜ பெண் பிரமுகரை பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியில் 40 வயதான பாஜ பெண் பிரமுகர் வசித்து வருகிறார். அவருக்கு 16 வயதில் மகள் உண்டு. கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் பாஜ பெண் பிரமுகர் மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலப்புரம் கூராடு பகுதியை சேர்ந்த சுபைருதீன் என்ற யூடியூபர், பாஜ பிரமுகர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் சமையலறையில் இருந்த பாஜ பெண் பிரமுகரை பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அதிர்ச்சியடைந்த அவர் அலறியதை தொடர்ந்து வீட்டில் இருந்த மகள் அங்கு ஓடி வந்தார். மகளைப் பார்த்ததும் சுபைருதீன் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து பாஜ பெண் பிரமுகர் வண்டூர் போலீசில் புகார் செய்தார். புகாாின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, சுபைருதீனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.