இரணியலில் டாஸ்மாக் மதுக்கடை, பாரை மூட வேண்டும் கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி மனு
நாகர்கோவில், அக்.28: இரணியலில் டாஸ்மாக் மதுக்கடை, பார் ஆகியவற்றை மூட வேண்டும் என கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் குமரி மாவட்ட கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆன்சி சோபா ராணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பான மனுவில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த லாசர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், இரணியல் மதுபானக்கடை எண் 4860 உடன் அமைந்திருக்கும் மதுபான விடுதி வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு உள் வருவதால் நீதிமன்ற உத்தரவு கிடைத்த 48 மணி நேரத்தில் மூட மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை பின்பற்றி மதுபான விடுதியையும், அது போன்று 100 மீட்டர் சுற்றளவுக்கு உள்ளாக அமைந்திருக்கும் மதுபான கடையையும் மூடி அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதுபான கடை மற்றும் மதுபான கடை மற்றும் விடுதியால் ஏற்படும் சிரமத்தை போக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.