தக்கலை அருகே நாற்காலி துவாரத்தில் சிக்கிய குழந்தை கால் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
தக்கலை, அக்.28: தக்கலை அருகே உள்ள குழிக்கோடு அம்மாண்டிவிளை பகுதியில் ஒன்றரை வயதான ஆண் குழந்தை வீட்டில் உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நாற்காலியில் கால்கள் குழாய் வடிவத்தில் அமைந்துள்ளது. நாற்காலியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் வலது கால் திடீரென அந்த குழாயில் புகுந்தது. பின்னர் அதனை எடுக்க முடியாமல் குழந்தை விறீட்டு அழுதது. பெற்ேறார் அங்கு வந்து பார்த்த போது, குழந்தையின் கால் சிக்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்களும் பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தும் குழந்தையின் காலை குழாய் வடிவான பகுதியில் இருந்து மீட்க முடியவில்லை. இதையடுத்து தக்கலை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த வீரர்கள் பிளாஸ்டிக் நாற்காலியின் குழாய் வடிவ கால் பகுதியை கட்டிங் கருவி கொண்டு பிளந்தனர். சுமார் 10 நிமிடத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.