பூங்காவை சுத்தம் செய்த அஞ்சல் ஊழியர்கள்
நாகர்கோவில், செப். 27:இந்திய அஞ்சல் துறை சார்பில் மக்களிடையே சுற்றுபுற தூய்மை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் தபால்துறை ஊழியர்கள் நாகர்கோவில் அவ்வைசண்முகம் சாலையில் அமைந்துள்ள பூங்காவை சுத்தம் செய்தனர். நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தின் முதன்மை அஞ்சல் அதிகாரி சுரேஷ் தலைமை வகித்தார். அதிகாரிகள் ராஜேஷ்குமார், குனால் ஹெல்தர் மற்றும் அஞ்சலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement